வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் - முதலமைச்சர்

0 2879

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ட்விட்டரில் குறிப்பிட்ட அவர், மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும் என்றும் இதுவே வரலாறு சொல்லும் பாடம் என்றும் கூறினார்.

மேலும், உழவர் பக்கம் நின்று போராடியதும், அந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் பெருமைகொள்ளத்தக்கது என குறிப்பிட்ட முதலமைச்சர், அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா, காந்தியின் மண் என உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments