சென்னையில் கொரோனா பணியில் ஈடுபட்ட பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை, 2 மருத்துவர்கள் கைது

0 2382

கொரோனா காலத்தில் தனியார் விடுதியில் தங்கி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு ஆண் மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.

தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றிய பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மருத்துவர் வெற்றிச் செல்வனை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அதே விடுதியில் தங்கியிருந்த மற்றொரு பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வந்த புகாரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments