திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா

0 3033

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

விழாவின் 10ஆம் நாளான இன்று அதிகாலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, பின்னர் அதிகாலை 3.20 மணிக்கு ஆலயத்தின் கருவறை முன்பு உள்ள பிரதோஷ நந்தி சிலை அருகில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா, என்று சொல்லி வழிபட்டனர்.

மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள 2ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments