பீகார் மாநிலத்தில் நீதிபதியை துப்பாக்கி காட்டி மிரட்டி தாக்குதல்... 2 போலீஸ்காரர்கள் கைது

0 1755

பீகார் மாநிலம் மதுபானியில் உள்ள மாவட்ட குற்றவியல் நீதிபதிக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்த இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை தானாக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம் அடுத்த விசாரணை 29 ஆம் தேதி நடைபெறும் போது டிஜிபியும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

துணை ஆய்வாளர் அபிமன்யு குமார் மற்றும் கோபால் பிரசாத் இரண்டு போலீஸ்காரர்கள் ஒரு வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அழைக்கப்பட்டனர்.

அப்போது அவர்கள் துப்பாக்கியைக் காட்டி நீதிபதி அவிநாஷ் குமாருக்கு மிரட்டல் விடுத்ததுடன் அடித்து உதைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீதிபதியைக் காப்பாற்ற முயன்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments