10 வயது சிறுமி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த வளர்ப்புத் தந்தை-நெல்லையில் பயங்கரம்..!

0 3428

நெல்லை மாவட்டம் பணகுடியில் 10 வயது சிறுமி மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்டான்.

காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருடைய கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிலையில், 3 குழந்தைகளோடு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசு அந்தோணிராஜ் என்பவனை 2வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். புதன்கிழமை அங்குள்ள பேக்கரி ஒன்றில் திண்பண்டம் வாங்கிய குழந்தைகள் 3 பேரும் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்ததும் குடி போதையில் இருந்த ஜேசு அந்தோணிராஜ், குழந்தைகளைத் தகாத சொற்களால் திட்டி தாக்கியுள்ளான். தொடர்ந்து அருகிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து 3 பேர் மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றான் என்று கூறப்படுகிறது.

இதில் 2 குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடிவிட, மகேஸ்வரி என்ற 10 வயது மகள் மட்டும் தீயில் சிக்கிக்கொண்டாள். அலறித்துடித்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், 90 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments