அரசு மருத்துவர் பணிக்காலத்தில் இறந்தால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி... தமிழக அரசு ஆணை

0 2614

அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் சேமநல நிதி வழங்கத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தநிலையில், அதை ஏற்றுத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் 500 ரூபாய் பிடிக்கப்பட்டு வங்கியில் செலுத்தப்படும்.

பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு மருத்துவரின் குடும்பத்துக்கு இந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இதைக் கண்காணிக்க ஊரக நலப்பணிகள் இயக்குநர் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments