ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை... திருமணமான ஒரே வருடத்தில் விபரீதம்

0 3076

சென்னை கிழக்கு தாம்பரத்தில், ஆன்லைனில் ரம்மி விளையாடி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்த இளைஞர், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலையூரை சேர்ந்த முருகன் என்பவருக்கு, கடந்தாண்டு திருமணம் ஆன நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில், அவர் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்ட நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்த முருகன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

சேலையூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே வருடத்தில், இளைஞரின் விபரீத முடிவால், அவரது மனைவியும், கைக்குழந்தையும் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments