நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஆம்னி வேனும் லாரியும்... 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

0 2822

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 8 பேர் வாடகை ஆம்னி வேனில் பழனி முருகன் கோவில் சென்றுவிட்டுத் திரும்பினர். ஆம்னி வேன் அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் நிலையில், சிவகிரி அருகே விளக்கேத்தி என்ற இடத்தில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த லாரியை கவனிக்காத ஓட்டுனர் திடீரென பிரேக்கை அழுத்தியுள்ளார்.

மழை பெய்து ஈரமாக இருந்த சாலையில் பிடிப்பு கிடைக்காத வேன், லாரியின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கி, உருத்தெரியாமல் போனது. வேனில் பயணித்த 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடம் அடிக்கடி விபத்து நிகழும் பகுதி என்று கூறும் அப்பகுதி மக்கள், சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments