ஹாரி பாட்டர் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு

0 3681

பிரிட்டன் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங் எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட ஹாரி பாட்டர் படத்தின் முதல் பாகம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதையொட்டி நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அப்படத்தின் முக்கிய நடிகர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக வார்னர் ப்ரோஸ் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

ஹெச்.பி.ஓ மேக்ஸ் ஓ.டி.டி தளத்தில் 2022 ஜனவரி 1 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள Harry Potter 20th Anniversary: Return to Hogwarts நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் நாயகன் டேனியல் ராட்கிளிஃப் மற்றும் இதர நடிகர்களான எம்மா வாட்சன், ருபெர்ட் க்ரின்ட் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2001 முதல் 2011 வரை வெளியான 8 பாகங்கள் கொண்ட ஹாரி பாட்டர் திரைப்படங்கள், உலகம் முழுவதும் சுமார் 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments