காவிரியில் நீர்வரத்து 42,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரிப்பு

0 2265

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியிலிருந்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நேற்றுக் காலை நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக இருந்தது. தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் இன்று காலை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் மூடியபடி ஆர்ப்பரித்து வெள்ளம் பாய்கிறது.

இதனால் அருவியிலும் ஆற்றிலும் குளிக்கவும், ஆற்றில் பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வந்து அருவியையும் ஆற்றையும் பார்த்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments