சூர்யாவை தாக்க கூறிய நபரை உதைத்தால் நான் பணம் தருகிறேன்: சீமான்

0 4637

ஜெய் பீம் திரைப்படத்தில் அக்னி சட்டியை காண்பித்தது தவறு, என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

வ.உ.சி-யின் 85-வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெய்பீம் படம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தில் உள்ள உண்மைத் தன்மையை ஏற்று கொள்ளாமல் இருக்க முடியாது, என கூறியதுடன், படத்தில் அக்னி சட்டி காட்சியை தவிர்த்திருக்கலாம், என்றும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு பரிசு தொகை அறிவித்த நபரை உதைத்தால், தான் பணம் தருவதாகவும் சீமான் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments