திருவண்ணாமலை தீபம் - 20,000 பக்தர்களுக்கு அனுமதி

0 3808

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் உள் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயாயிரம் பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரும் கலந்துகொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தீபத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில் இந்து அறநிலையத் துறை ஆணையரின் பதில் மனுவில், இருபதாயிரம் பேர் கிரிவலம் செல்ல மட்டுமே அனுமதிப்பதாகவும், மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் மூன்று நாள் கட்டளைதாரர்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிப்பதாகவும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவை இணையத் தளம் அல்லது தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காணலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments