போக்சோ வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0 3279

சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளைத் தண்டிப்பதில், பாலியல் நோக்கம் உள்ளதா என்பதுதான் முக்கியம் எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், போக்சோ வழக்கில் குற்றவாளியை விடுவித்த மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.போக்சோ வழக்கில்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் 12 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சிறப்பு நீதிமன்றம் ஒருவனுக்கு போக்சோ சட்டப்படி மூன்றாண்டுகளும், இந்தியத் தண்டனைச் சட்டப்படி ஐந்தாண்டுகளும் சிறைத்தண்டனை விதித்தது.

இதை எதிர்த்த மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சிறுமி ஆடை அணிந்திருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர் தொட்டதால் அது போக்சோ சட்டப்படி குற்றமாகாது என்றும், பாலியல் நோக்கத்துடன் தொடுதல் இருந்தால் தான் குற்றமாகும் என்றும் கூறி போக்சோ சட்டப்படி தண்டித்ததை ரத்து செய்து  ஜனவரியில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அட்டர்னி ஜெனரலும், தேசியப் பெண்கள் ஆணையமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும், உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறைப்படி பார்த்தால் எவரேனும் கையுறை அணிந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுத் தப்பிவிட முடியும் என்றும் அட்டர்னி ஜெனரல் தனது வாதத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ததுடன், 4 வாரங்களில் சரணடைந்து சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின்படி சிறைத் தண்டனைக்குள்ளாகும்படி குற்றவாளிக்கு அறிவுறுத்தியது. சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகளைத் தண்டிப்பதில், பாலியல் நோக்கம் உள்ளதா என்பதுதான் மிக முக்கியம் என்றும் தெரிவித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments