சாலைகளில் கால்நடைகள் திரிந்தால் ரூ.10,000 அபராதம் - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

0 2986

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் கால்நடை வளர்ப்போரிடமிருந்து அபராதமாக 10,000 வசூலிக்கப்படும்  என்று மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்துள்ளார்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் நிறைந்து காணப்படுவதால், மேய்ச்சலுக்கு இடமின்றி சாலைப்புறங்களிலுள்ள குப்பைத் தொட்டியில் கிடைக்கும் இலை தழைகளை நாடும் கால்நடைகள், பால் கறக்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சாலையில் சுற்றித்திரிகின்றன.

இதன்காரணமாக, இருசக்கரவாகனத்தில் வருவோர் விபத்துகளை சந்திப்பதால் மாடுகளை சாலைகளில் திரியவிடும் மாடு வளர்ப்போரிடமிருந்து அபராதம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி பிடிபடும் மாடுகள் மூன்று தினங்களுக்குள்ளாக அபராதத்துடன் மீட்கப்படவேண்டும் இல்லையெனில் மாடுகள் ஏலத்தில் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments