காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி... 16 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!

0 9354

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்,சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கூறினார்.

 

நாளைய தினம் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் 20 செண்டி மீட்டர் மழையும், தாராபுரத்தில் 13 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல், தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இரு நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments