தொடர்ந்து ஆறாவது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் !

0 3002

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து 45 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை நவம்பர் 13ஆம் நாள் இரவில் எட்டியது. அதன்பிறகு அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.

அணையில் இருந்து சுரங்க நீர்மின் நிலையம் வழியே 22 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியே 23 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கிழக்கு மேற்குக் கால்வாய்களின் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சி ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments