கனரக, நடுத்தரச் சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் செல்வதற்குத் தடை... நொய்டா - டெல்லி - காளிந்திகஞ்ச் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல்

0 2066

டெல்லிக்குள் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நொய்டா - டெல்லி - காளிந்திகஞ்ச் வழித்தடத்தில் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

காற்றுமாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் கனரக, நடுத்தரச் சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்தும்படி நொய்டா போக்குவரத்துக் காவல்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி நொய்டாவில் வாகனத் தணிக்கை நடைபெற்றதால் இன்று காலை கடுமையாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments