புதுக்கோட்டையில் உய்யக்கொண்டான் குளம் உடைந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

0 2258

புதுக்கோட்டையில் உய்யக்கொண்டான் குளம் உடைந்து உய்யக்கொண்டான் நகர், சின்னப்பா நகர், ஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் முழங்கால் அளவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

நேற்று மாலையில் புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் நீடித்த கனமழையால், நீர்நிலைகளின் பலவீனமான கரைகளை உடைந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மழைக்கே கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் நேற்று பெய்த மழையினால் மீண்டும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட உய்யக்கொண்டான், ஸ்ரீ நகர் பகுதிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments