டிக்கெட் வாங்குமாறு கூறிய நடத்துனரை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

0 3213

சென்னை கீழ்பாக்கத்தில் டிக்கெட் வாங்குமாறு கூறிய பேருந்து நடத்துனரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

பிராட்வேயில் இருந்து கோயம்பேடு சென்ற பேருந்தில், டிக்கெட் வாங்குமாறு கூறிய நடத்துனர் செல்வதுரையிடம், தன்னை டிக்கெட் வாங்குமாறு கூறக்கூடாது என்றும் கத்தியால் குத்திவிடுவேன் என்றும் ரவுடி மாரிமுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாரிமுத்துவை கைது செய்த போலீசார், முத்தியால்பேட்டை பகுதியில் பெண் ஒருவரிடம் கத்தியைக் காட்டி சங்கிலி பறித்தக் கையோடு பேருந்தில் ஏறி நடத்துனரை மிரட்டியதாகத் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments