வரலாறு காணாத வகையில் கனமழை பதிவு - தத்தளிக்கும் கனடா

0 4380

கனடாவில் வரலாறு காணாத அளவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவர் தீவு உள்ளிட்ட பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, காணாமல் போன மக்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மெரிட், பிரின்ஸ்டன், அபார்ட்ஸ்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவுகள் போல் மாறின.

ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கி உள்ளதாகவும், அரசு உத்தரவை மீறி கால்நடைகளை பாதுகாக்கச் சென்ற விவசாயிகள், குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மழை வெள்ளத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments