லிதுவேனியா நாட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அகதிகல் மீது தாக்குதல்: நாயை விட்டு கடிக்கவிட்டும் வீரர்கள் அட்டூழியம்

0 3626

லிதுவேனியா நாட்டின் எல்லையில் தூங்கிக் கொண்டிருந்த அகதிகளை நாயை விட்டு கடிக்க வைப்பதும், கற்களை வீசி பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குவதுமான வீடியோவை பெலாரஸ் எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

ஈராக்கை விட்டு வெளியேறியவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சமடையும் முயற்சியாக லிதுவேனியா, பெலாரஸ் நாடுகள் எல்லையில் முகாமிட்டுள்ளனர்.

கடும் குளிரில் இருந்து தப்பிக்க ஸ்லீப்பிங் பேங் எனப்படும் பைகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை வீரர்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் பல்வேறு தரப்பிலான மக்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பையில் மனிதர் இருப்பது தெரியாது என்றும், நாய் கடித்ததில் அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என லிதுவேனியா பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments