26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

0 15768

கனமழை காரணமாக 26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோல, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், தருமபுரி மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை, நாகை, அரியலூர்,கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சேலம், திருவாரூர், திருவண்ணாமலை, திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments