இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி மரண தண்டனை மேல் முறையீடு மசோதா, சர்வதேச நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

0 3187

பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு அனுமதிக்கும் வகையிலான மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி குல்பூஷண் ஜாதவுக்கு அந் நாட்டின் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ல் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து இந்தியா சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் முறையிட்டது.

இந்தியாவின் மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஜாதவ் மேல் முறையீடு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments