ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு விவசாயிகளை குறை சொல்லாதீர்கள்-உச்சநீதிமன்றம்

0 2988

5 நட்சத்திர ஏசி அறைகளில் உட்கார்ந்துக் கொண்டு விவசாயிகள் பதர்களை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது, விவசாயிகள் பிரச்சினை நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். 

டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த எடுக்கப்படும்  நடவடிக்கைள் குறித்த பட்டியலை தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த, மத்திய அரசு தெரிவித்துள்ள நடவடிக்கைகளை, டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments