குமரி - திருவனந்தபுரம் மார்க்க ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு... ரயில் சேவை துண்டிப்பு

0 3229

மண் சரிவு காரணமாக, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் வந்து செல்லும் ரயில் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரணியல், பள்ளியாடி உள்ளிட்ட 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் மண் குவியல்களை ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது.

வையக்கலூர், பருத்தி விளை, மங்காடு பகுதிகளில் வீடுகளில் புகுந்த தண்ணீர் தற்போது வடிய துவங்கியுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளை தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விளை நிலங்களிலும் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பரளியாற்றில் வெள்ளம் குறைந்ததால், ஆற்றங்கரையோர கிராமங்களில் வெள்ளம் வடிய துவங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments