கேரள மாநிலத்தில் தரைப்பாலத்தை கடக்கும்போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவரை மீட்ட பொதுமக்கள்

0 2409

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வாகனத்தில் தரைப்பாலத்தை கடக்கும்போது வெள்ளத்தில் சிக்கியவரை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

அட்டப்பாடியில் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், அப்பகுதியின் தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் தரைப்பாலத்தை சோமன் என்பவர் வேனில் கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, அந்த வாகனம் கவிழ்ந்தது. இதனை அடுத்து வேனில் இருந்து வெளியேறிய அவர் வெள்ளத்தின் நடுவே சிக்கிக் கொண்டதை கண்ட அப்பகுதி மக்கள், கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments