தேனி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக் கொலை.! 4 பேர் கைது

0 5697

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கூடலூரைச் சேர்ந்த மதன் என்ற அந்த வழக்கறிஞர் உத்தமபாளையம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். மதியம் இருசக்கர வாகனத்தில் சென்ற மதன் மீது பொலீரோ வாகனம் ஒன்று பலமாக மோதியுள்ளது.

நிலை தடுமாறி விழுந்தவரை காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

படுகாயங்களுடன் அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட மதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஆண்டு குள்ளப்ப கவுண்டன்பட்டி யைச் சார்ந்த ரஞ்சித் குமார் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதனுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ரஞ்சித் குமாரின் உறவினர்கள் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments