வெளியானது 'ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்' படத்தின் டிரெய்லர்

0 4070

ஹாலிவுட்டின் பிரபல சூப்பர் ஹீரோவான 'ஸ்பைடர் மேன்' கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவான 'ஸ்பைடர் மேன்- நோ வே ஹோம்'படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர் மேன் - ஃபேர் ஃப்ரம் ஹோம்' படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியான சில மணிநேரங்களிலேயே இணையதளத்தில் வைரலானது.

இதற்கு முந்தைய ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரங்கள் அனைத்தும் இப்படத்தில் இடம்பெற்றதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டாம் ஹோலாண்ட் ஸ்படைர் மேனாக நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments