சென்னையில் இருவேறு கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

0 3570

சென்னையில் இருவேறு கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

அரும்பாக்கத்தில் இயங்கி வரும் வசந்தம் புரமோட்டர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஜவகர் என்பவர் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் அதிபரான ஜவகர் கடந்த 2017ஆம் ஆண்டு "பயமா இருக்கு" என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் லோகேஷ் என்பவருக்கு சொந்தமான மகாலட்சுமி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில், இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் உரிமையாளர்கள் வீடுகள், தொடர்புடைய இடங்கள் என மொத்தம் எட்டு இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments