வடசென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப் பிடித்த போலீசார்

0 2445

வடசென்னையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.

கொடுங்கையூர் பகுதியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, சுகன்யா என்ற பெண் அணிந்திருந்த 8 சவரன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களின் புகைப்படங்களை எடுத்தனர். விசாரணையில் திருடர்கள் இருவரும் ராசா மற்றும் பிரித்விராஜ் என்பதை அறிந்தனர்.

இந்நிலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, ராசாவை மடக்கி பிடித்து அவனிடமிருந்து 8 சவரன் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments