கம்பம் அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தையம்.! 8 கிலோ மீட்டர் தூரம் சீறிப்பாய்ந்த 100க்கும் மேற்பட்ட மாடுகள்

0 2432

தேனி மாவட்டம் கம்பம் அடுத்த சுருளிப்பட்டியில் நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தையத்தில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

பந்தையத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் மற்றும் வண்டி சாரதிகள் கலந்து கொண்டனர். போட்டியானது சுருளிப்பட்டியில் இருந்து சுரளித்தீர்த்தம் வரையில் 8 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடு மற்றும் வண்டி ஓட்டும் சாரதிக்கு ரொக்கம், கேடையம், கோப்பை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டது. சாலையின் இருபுறங்களில் நின்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தையத்தை கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments