நடிகரும், கதாசிரியருமான RNR மனோகர் உயிரிழப்பு

0 10140
நடிகரும், இயக்குநரும், கதாசிரியருமான RNR மனோகர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

நடிகரும், இயக்குநரும், கதாசிரியருமான RNR மனோகர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

1994 ஆம் ஆண்டு மைந்தன் படம் மூலம் கதாசிரியராகவும், இணை இயக்குநராகவும் அறிமுகமான இவர், கோலங்கள் படத்தில் கதாசிரியராக பணியாற்றியதோடு அப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

மேலும், புதுமை புத்தன், தென்னவன், புன்னகை பூவே, வந்தே மாதரம் ஆகிய படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய இவர், மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதி இயக்கியும் உள்ளார். அதேப்போல், மிருதன், கவன், தீரன் அதிகாரம் ஒன்று, விஸ்வாசம், டெடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் RNR மனோகர் நடித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 20 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments