உ.பி. சட்டப்பேரவை தேர்தல் - மீண்டும் பாஜக ஆட்சி என கணிப்பு

0 3581
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் போல்ஸ்ட்ராட் ஆகியவை இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தினர். இதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மொத்தமுள்ள 403 இடங்களில் 239 முதல் 245 வரையிலான இடங்களில் வெல்லக்கூடும் என தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமாஜ்வாடி கட்சி 119 முதல் 125 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி இம்முறை 28 முதல் 32 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments