தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதம்..

0 2246
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

பிரியாவிடை விழாவை தவிர்த்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யும் கொலீஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், பிரியாவிடை நிகழ்வை தவிர்த்து கொல்கத்தா புறப்பட்ட அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள் என சக நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனது நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும் உயர்நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே என்றும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments