வெள்ள பாதிப்புகளை சீரமைக்க.. ரூ.2,079 கோடி ஒதுக்கீடு செய்க... மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

0 2307

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேத பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும், வெள்ள சேதங்களை சீரமைக்க தமிழகத்திற்கு 2ஆயிரத்து079 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த கனமழையால், சென்னை, குமரி, டெல்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருன்றன.

இந்த நிலையில், டெல்லி சென்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான கோரிக்கை வைத்தார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளதால், வெள்ள பாதிப்பை சீரமைக்க, நிரந்தர மறுசீரமைப்பு நிதியாக 2,079 கோடி ரூபாயை வழங்குமாறும், அதில், முதற்கட்டமாக 550 கோடி ரூபாயை விடுவிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேத விபரங்களை கேட்டறிந்தார்.

மத்திய அரசு தரப்பிலிருந்து 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக இன்று மாலை தமிழகம் வரவுள்ளது எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments