தெலுங்கானா மாநிலம் மன்யார் நதி தடுப்பணைகளில் குளிக்கச் சென்ற 5 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி.!

0 2079

தெலுங்கானா மாநிலம் மன்யார் நதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜன்னா ஸ்ரீசில்லா மாவட்டம் நகரை ஒட்டி மன்யார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், தடுப்பணையில் மழை வெள்ளம் வழிந்து ஓடுகிறது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8 பேர் குளிப்பதற்காக தடுப்பணைக்கு சென்றிருக்கின்றனர். 6 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், 2 பேர் கரையில் அமர்ந்திருந்துள்ளனர்.

நீச்சல் தெரியாத நிலையில், ஆழத்தில் சிக்கி கொண்ட மாணவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததாக, உடன் சென்றவர்கள் வந்து பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 பேரை சடலமாக மீட்ட நிலையில், மாயமான ஒரு மாணவனை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments