கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைபாலம் மூழ்கியதால், மாற்று பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்

0 1931

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவுண்டன்யா மகாநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கோபாலபுரம் தரைப்பாலம் நீரில் முழ்கி, வாகனங்கள் மாற்றுப்பாதையில் விடப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மோர்தானா அணை நிரம்பி, கவுண்டன்யா மகாநதி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆற்றின் குறுக்கே கோபாலபுரம் என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

இந்த தரைப்பாலம் குடியாத்தம் நகர மையபகுதியில் இருந்து பேர்ணாம்பட்டி, ஆம்பூர் பகுதிக்கு செல்லும் முக்கிய வழியாகும். இதனால், அனைத்து வாகனங்களும் காமராஜர் பாலம் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகி, வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments