ஓடை வெள்ளப்பெருக்கில் மாணவன் பலியான விவகாரம்: தாசில்தார் வாகனத்தை சிறை பிடித்த கிராமமக்கள்

0 2375

கடலூரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஓடைபாலத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தாசில்தார் மற்றும் கோட்டாட்சியர் வாகனங்களை கிராமமக்கள் சிறை பிடித்தனர்..

பெண்ணாடம் அடுத்த தீவலூர்-விருத்தாசலம் இடையிலான தரைப்பாலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இந்நிலையில், ஓடையில் வெள்ளப்பெருக்கு காரணமாக, தீவளூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த நாரயணன் என்ற பத்தாம் வகுப்பு மாணவன் நேற்று மாலை தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இதுகுறித்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கிடையே, நேரில் சென்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  பாதிக்கப்பட்ட மாணவனின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணத் தொகையை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments