இந்திய திருநாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.. பிரதமர் நரேந்திர மோடி

0 2511
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் அனைத்து மாநிலங்களும் அடித்தளமாக உள்ளதாகவும், அனைவரின் முயற்சியால் நாட்டைப் புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில் அனைத்து மாநிலங்களும் அடித்தளமாக உள்ளதாகவும், அனைவரின் முயற்சியால் நாட்டைப் புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகள், மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவற்றின் சபாநாயகர்களின் 82ஆவது மாநாடு இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் ஜனநாயகம் ஒமு அமைப்பு முறை மட்டுமல்லாமல், இயல்பாகவும் இயல்பான போக்காகவும் உள்ளதாகத் தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் நாட்டைப் புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லவும், அசாதாரண இலக்குகளை அடையவும் வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரின் முயற்சியால்தான் இது நிறைவேறும் எனக் குறிப்பிட்டார்.

வடகிழக்கு மாநிலங்களில் நெடுங்காலச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டதாகவும், பல காலமாக நிறைவேற்றப்படாத வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டிச் செயல்படுவதாகவும், 110 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது ஒரு மைல்கல் என்றும் தெரிவித்தார்.

தனது எண்ணத்தில் தோன்றிய, ஒரே நாடு ஒரே சட்டமன்றம் என்கிற தளம், நாடாளுமன்ற அமைப்புமுறைக்குத் தொழில்நுட்ப ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் ஜனநாயக அலகுகளை இணைப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments