இந்தியாவுடன் எல்லை யுத்தத்தில், சீனா தொடர்ந்து ஈடுபடுகிறது - அமெரிக்க செனட் சபை

0 2190

இந்தியாவுடன், அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தாலும், எல்லை யுத்தத்தில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தற்போதைய சூழலில் சீனா, அதன் அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி சுதந்திரமான சர்வதேச கடல் வழிபோக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவித்தார்.

மேலும், சீனாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினரான உய்குர் இன மக்களுக்கு எதிராக அந்நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், தைவான் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் கார்னின் குற்றஞ்சாட்டினார்.

கடந்த வாரம் ஜான் கார்னின் தலைமையிலான நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த நிலையில், சீன அச்சுறுத்தல்கள் தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments