பொங்கலுக்கு 20 பொருட்கள் தொகுப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 5332
வருகிற தைப்பொங்கலை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வருகிற தைப்பொங்கலை முன்னிட்டு  20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரம் குடும்பங்களுக்கு மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் இந்த 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தொகுப்பில் முழு கரும்பும் சேர்க்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய அவர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments