நாளை தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு.. 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - இந்திய வானிலை மையம்

0 25754
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வட தமிழகத்தை நெருங்கும் என்பதால் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வட தமிழகத்தை நெருங்கும் என்பதால் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து நாளை தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அம்மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் சென்னை வானிலை வானிலை மையம் அறிவித்தது.

மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கும், ஒரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், கோவா - கர்நாடக மாநில கடலோர பகுதிக்கு அருகே கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments