தர்மபுரி அருகே கிணற்றில் கார் விழுந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

0 30024

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச்  சேர்ந்த வீரன் என்பவர் மனைவி மற்றும் மகளுடன் தனக்கு சொந்தமான பொலிரோ காரில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.  தர்மபுரி மாவட்டம் பொன்னேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்  சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த விவசாய கிணற்றில் தலைகுப்புற விழுந்தது.

இதில்  வீரன் மற்றும் அவரது மகள் சுஷ்மிதா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காரின் கதவு திறந்த போது  மனைவி கீழே விழுந்ததால் அவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments