ஆக்ரமித்த பகுதிகளை விட்டு வெளியேறு -பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

0 14539

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நியுயார்க்கில் உள்ள ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தலைமையகத்தில் நடைபெற்ற விவாதத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் மற்றும் லடாக் ஆகியவை எப்போதும் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும் இதில் பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் சில பகுதிகளும் அடங்கும் என்று திறந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதி காஜல் பட் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments