விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்ற 2 ஆய்வாளர்கள் மீது வழக்குப்பதிவு

0 4380

விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்றதாக 2 காவல் ஆய்வாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு  காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட்  மற்றும் சைதாப்பேட்டை சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் துறையின் கீழ் செயல்படும் விபச்சார தடுப்புப் பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றியுள்ளனர்.அப்போது விபச்சார புரோக்கர்களிடமும் மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தும் மசாஜ் பார்லர் உரிமையாளர்களிடமும் லஞ்சம் பெற்றுக்கொண்டு  சென்னையில் விபச்சாரத் தொழில் தடையின்றி  நடப்பதற்கு அனுமதி அளித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவர் மீதும் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து அவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  கணக்கில் வராத பணம், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments