இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20ஓவர் கிரிக்கெட் போட்டி... ஜெய்ப்பூரில் இன்று மோதல்

0 4098

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான முதலாவது 20ஓவர் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும்,  புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் 20ஓவர் போட்டி என்பதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments