கட்டுப்பாட்டை இழந்த கார் விவசாயக் கிணற்றில் விழுந்து விபத்து.. தந்தை-மகள் உயிரிழப்பு

0 4009
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்த விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்த விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரைச்  சேர்ந்த வீரன் என்பவர் மனைவி மற்றும் மகளுடன் தனக்கு சொந்தமான பொலிரோ காரில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். 

தர்மபுரி மாவட்டம் பொன்னேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்  சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. இதில்  வீரன் மற்றும் அவரது மகள் சுஷ்மிதா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

காரின் கதவு திறந்த போது  மனைவி கீழே விழுந்ததால் அவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கார் மற்றும் உயிரிழந்த 2பேரின் உடல்களை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments