போயிங் நிறுவனத்திடம் இருந்து எழுபத்தி இரண்டு, 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை வாங்க ஆகாசா ஏர் ஆர்டர்..

0 5328
போயிங் நிறுவனத்திடம் இருந்து எழுபத்தி இரண்டு 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை வாங்க பட்ஜெட் ஏர்லைன்சான ஆகாசா ஏர் ஆர்டர் அளித்துள்ளது.

போயிங் நிறுவனத்திடம் இருந்து எழுபத்தி இரண்டு 737 மேக்ஸ் ஜெட் விமானங்களை வாங்க பட்ஜெட் ஏர்லைன்சான ஆகாசா ஏர் ஆர்டர் அளித்துள்ளது.

ஆகாசா ஏரின் உரிமையாளர் நிறுவனமான SVN  ஏவியேஷன், அடுத்த ஆண்டு தனது சேவையை துவக்க உள்ளதாக  கடந்த மாதம் அறிவித்தது. இதற்கான ஆரம்ப கட்ட கிளியரன்சை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்கனவே வழங்கி உள்ளது.

346 பேர் பலியான இரு பெரும் விபத்துக்களை தொடர்ந்து போயிங் 737மேக்ஸ்  விமானங்கள் இரண்டரை ஆண்டுகளாக பறக்காமல் கடந்த 2019 மார்ச் முதல் உலகெங்கும் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை நீக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஆகாசா ஏர் நிறுவனத்தின் ஆர்டர், பெரும் இழப்பை சந்தித்த போயிங் நிறுவனத்திற்கு ஆசுவாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆகாசா ஏர் நிறுவனத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments