சிவகாசியில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில், கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 2 பெண்கள்..

0 2520

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில், தேடப்பட்டு வந்த இரண்டு பெண்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

ராமநாதன் - பஞ்சவர்ணக்கிளி தம்பதிக்கு சொந்தமான இரண்டு மாடி கொண்ட அந்த கட்டடத்தில் ஒரு தளத்தில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த நிலையில், உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்து மொத்த கட்டிடமே தரைமட்டமானது.

கட்டிடத்தில் 4 பேர் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த உடனேயே இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments