மழை நீர் புகாமல் தடுக்க அடுக்கு மாடி வீட்டை ஆறடிக்கு உயர்த்திய வீட்டின் உரிமையாளர்..

0 4643
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் புகாதவாறு ஜாக்கிகள் உதவியுடன் இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்றை ஆறடிக்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை திருவொற்றியூரில் மழை நீர் புகாதவாறு ஜாக்கிகள் உதவியுடன் இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்றை ஆறடிக்கு உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூர் கலைஞர் நகரில் தனது குடும்பத்தினரோடு வசித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர், கடந்த வாரம் பெய்த கன மழையினால் வீட்டுக்குள் மழை நீர் புகுந்ததாகவும் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் உருவானதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து, வீட்டை இடிக்காமல் உயர்த்த சென்னையை சேர்ந்த தனியார் கட்டட நிறுவனத்தை அவர் அணுகியதை தொடர்ந்து தரைமட்டத்தில் இருந்து 6 அடிக்கு உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 400 ஜாக்கிகளை கொண்டு வீட்டை உயர்த்தும் பணியில் ஈடுபடும் நிலையில், முதற்கட்டமாக வீட்டின் பேஸ்மென்ட் பகுதியில் ஜாக்கி வைத்து உயரத்தை அதிகரிப்பதாகவும், உயரத்தை அதிகரிக்கும்போது செங்கற்களை கொண்டு கீழே கட்டுமான பணி நடப்பதாகவும் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், இடித்து கட்ட 60 லட்ச ரூபாய் மேல் செலவாகும் என்ற நிலையில், வீட்டை உயர்த்த 7 லட்ச ரூபாய் வரை தான் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments